தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் அருள் மொழி வர்மா என்பவரது மகள் பேபிலல்லி (29). இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சேலத்தில் தங்கி அங்கிருந்து தினம் தோறும் அரசு மருத்துவமனைக்கு காரில் காலையில் வந்து விட்டு மீண்டும் மாலை சேலத்திற்கு சென்று அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வந்துள்ளார். இதனையடுத்து மாலை பேபிலல்லி அறையில் தனியாக இருந்தபோது 60 மாத்திரைகளை தின்று  தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதை பார்த்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மருத்தவர்கள் பேபிலல்லிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலை கவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.