உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து 3 தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஆண் மாணவர்கள், பெண் மாணவர்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதனை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது. மேஜர் அங்கத் சிங் மகாவித்தியாலயா, SBD அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி, குல்கந்தி லாலராம் மகாவித்தியாலயா ஆகிய 3 கல்லூரிகளில் முறைகேடு நடைபெற்று உள்ளது என்று பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். இந்த கல்லூரிகளில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி செமஸ்டர் நடைபெற்றது.

அப்போது தேர்வு எழுதிய பெண் மாணவர்களை விட, ஆன் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. அது மட்டுமின்றி சில தேர்வு அறைகளில் ஆண் மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அதிக பெண்களைக் கொண்ட கல்லூரி என்பதால் தங்களது கல்லூரியில் வைத்து செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள்ள இப்பல்கலைக்கழகம் அனுமதித்தது. மேலும் இந்த தேர்வுகள் நடைபெறும் போது, தங்கள் கல்லூரியின் ஊழியர்களையே தேர்வு கண்காணிப்பாளராக கல்லூரி நியமிக்க முடியும். பெண் மாணவர்கள் இருப்பதாக, எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்