சென்னையில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வவதற்காக சேலத்திலிருந்து பேருந்து ஏறியுள்ளார். கடந்த திங்கள் கிழமை அன்று சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால் அங்கிருந்து மாதவரம் செல்ல பேருந்து இல்லை. இதனால் அவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாதவரத்தில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெண் ஆட்டோவில் ஏற மறந்து, வேகமாக நடந்துள்ளார்.

இருப்பினும் ஆட்டோ ஓட்டுனர் அப்பெண்ணை தொடர்ந்து சென்று அவரை மிரட்டி ஆட்டோவில் ஏற்றியுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் ஆட்டோவில் ஏறி உள்ளனர். அவர்கள் மூவரும் கத்தி முனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஆட்டோவை சேஸ் செய்து, மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது சுதாரித்து கொண்ட அவர்கள் பெண்ணை சாலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிய ஓடினார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது கூட்டாளியையும் தேடி வருகின்றனர்.