
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரயில்களை கவிழ்த்து விட அடிக்கடி மர்ம நபர்களால் தண்டவாளங்களில் சதி வேலைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் ரயில் செல்லும் தண்டவாள பாதையில் பெரிய இரும்பு கம்பியை வைத்து ரயிலை தடம் புரளச் செய்ய சதி வேலை நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பிலாஸ்பூருக்கும், ருத்ராபூருக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் ஆறு மீட்டர் நீளமுள்ள பெரிய இரும்பு கம்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிக்கு புகார் கிடைத்துள்ளது. அதிகாரி துரிதமாக செயல்பட்டு ரயில் ஓட்டுநரை தொடர்பு கொண்டு ரயிலை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதனால் இந்த விபத்திலிருந்து பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுபோன்று கான்பூரில் ரயில் பாதைகளில் எரிவாயு சிலிண்டர்கள், பெட்ரோல் கேன்கள், தீப்பெட்டிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று ராஜஸ்தானிலும் ரயில் பாதைகளில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி வைத்து ரயிலை தடம் புரளச் செய்ய சதி வேலைகள் நடந்துள்ளன. இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, இந்த ரயில் கவிழ்ப்பு சதி செய்யும் மர்ம கும்பல்களை காவல்துறையினர் தேடி வருவதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்