திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ருக்சனாவுக்கும் அனுமந்தநகரைச் சேர்ந்த டீ மாஸ்டரான ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் ராஜ்குமார் அரிவாளால் ருக்சனாவை வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ருக்சனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.