தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சங்குன்றம் கருப்பசாமி கோவில் தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று சலவை சோப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சேர்ந்தமரம் அருகே இருக்கும் கிராமத்திற்கு சென்றார். அப்போது ஒரு வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த இளம் பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.

அந்த பெண் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது கருப்பசாமி அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அந்த பெண் கூச்சலிட்டதும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு கருப்புசாமி அங்கிருந்து சென்றார்.. இதுகுறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.