கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் அப்துல் ரஜிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மும்தாஜ்(30) என்ற மனைவி உள்ளார். இவர் நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் வேலை பார்க்கும் ஆனந்த் என்பவர் மும்தாஜுக்கு அறிமுகமானார். மேலும் தனக்கு தெரிந்த ஒருவரிடம் பணத்தை கொடுத்தால் அவர் ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் தருவார் என ஆனந்த் பாபு ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மும்தாஜ் தன்னிடம் இருந்த 6 லட்சம் ரூபாய் பணம், 8 பவுன் தங்க நகை ஆகியவற்றை ஆனந்த் பாபுவிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தையும், நகையையும் பெற்றுக் கொண்ட ஆனந்த்பாபு மாதாந்தோறும் மும்தாஜுக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் பணம் வரும் போது தருகிறேன் என கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மும்தாஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.