
சென்னை மாவட்டத்தில் உள்ள வேங்கை வாசலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது கடந்த 2 மாதங்களாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் என்பவர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கீழ் தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தரையில் தேங்கி நின்ற தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
இதனை அறியாமல் சந்தன்குமார் தண்ணீரில் கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தன்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.