கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வினிதா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹார்ஸ் பவர் என்று நிறுவனத்தின் நிறுவனராவார். இவர் லிங்கிடுஇன்னில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பெரும் அதிர்ச்சியையும், ஆசிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது செப்டோ டெலிவரி ஆப் காண்பிக்கும் விலை வேறுபாடு குறித்த பதிவாகும். அதாவது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களுக்கு இடையேயான விலைவேற்றுப்பாட்டை காட்டுகிறது. இவர் அந்த 2 ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.

அதில் ஆண்ட்ராய்டு போனில் தோராயமாக 500-600 கிராம் குடைமிளகாவின் விலை 21 ரூபாய்க்கும், ஐபோனில் அதே எடை கொண்ட குடைமிளகாய் 107 ரூபாய்க்கும் காட்டுகிறது. அந்த ஸ்கிரீன்ஷாட் உடன் செப்டோ இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். இந்த ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் செப்டோ தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் வழங்கவில்லை.