
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு உயிர்கள் பலியாகி இருக்கிறது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டத்தில் சில திருத்தம் செய்யவேண்டும் என்று ஆளுநர் ரவி அனுப்பினார். இந்த நிலையில் திருத்தம் செய்யாமல் மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அதன்பின் ஆளுநர் ரவி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதனை தொடர்ந்து தற்போது இச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.