
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள், இன்னைக்கு நிறைய கூட்டங்கள் நடக்கும்போது சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் வந்து நாம் தமிழர் கட்சியில சேர நினைக்கிறான். அந்த புள்ளைங்க பத்து வயசோ, 12 வயசோ தெரியல. ஒரு குட்டி பையன். வந்து கேக்குறான்…. நான் சீமான் கட்சியில சேரனும் , நாம் தமிழர் கட்சியில் சேரனும் அப்படின்னு வந்து பேசுறேன். ஏன் ? அவர் இந்த சூழ்நிலையை…
இந்த அரசியலை… இந்த சமூக கோட்பாட்டை .. நாம் எவ்வளவு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை அவன் புரிந்து கொண்டு விட்டான். நாளைக்கான மண்ணையும், மலையும் அடுத்த தலைமுறைக்கு காப்பாற்றி வைத்துவிட்டு போவதற்கான ஒரே தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் தான். நாம் தமிழர் கட்சி தான். இந்த தமிழ் தேசிய அரசியல் தான். இந்த நேர்மையானவர்கள் தான் என்று முடிவு கட்டுறோம் .
அந்த பச்சிளம் பிள்ளைகளுக்கு புரிந்ததை நாம் இந்த தலைமுறையோடு… இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களும் புரிந்து கொண்டோமேயானால்… இன்னும் பத்து ஆண்டு காலம் போராடாமல், எளிமையாக தமிழ் தேசிய அரசியலை கட்டமைக்க முடியும். இது சூழ்ச்சி நிறைந்த உலகம் தான். இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகும் சொல்கின்ற காலம் தான். நம்மை பொய்யாக கட்டமைப்பார்கள் தான். ஆனாலும் இந்த தளத்தில் நாம் நிற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஏன்? இந்த திராவிடர்கள், நம்மளை இப்படித்தான் துரத்தி அடிச்சாங்க. உங்கள் வரலாற்றை மறைச்சாங்க, நம் வாழ்வியலை மறைச்சாங்க, நம் கதையை மறைத்தார்கள், நம் பண்பாட்டை மறைத்தார்கள், அவற்றையெல்லாம் திருப்பி கொண்டுவதற்கான வரலாற்றுப் பெரும் புரட்சி தான் நாம் தமிழர் கட்சி. இது ஒரு அரசியல் போராட்டமாக… ஒரு அரசியல் இயக்கமாக இருந்து ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது மட்டுமல்ல, எளிய மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஆக பெரும் கனவு .
ஒரு சாதாரண கூட்டத்தில் இருந்து, எந்த விதமான விழிப்புணர்வும் இல்லாத… அரசியல் விழிப்புணர்வு இல்லாத…. அதிகாரம் இல்லாத… உரிமை இல்லாத மக்களை அந்த இடத்தில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து நிறுத்தி, அவருக்கத்தான உரிமை – அதிகாரத்தின் பெற செய்வதற்காக நாம் தமிழர் கட்சி என்றைக்கோ மாறிவிட்டது.
கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாகுது கட்சி தொடங்கி, அதிலும் குறிப்பாக ,பெண்களுக்கு சமூக நீதி, பெண்ணியம் பேசக்கூடிய இந்த திராவிட கட்சிகள் எந்த கட்சிகளும் கொடுக்காத பெரும் வாய்ப்பை நாம் தமிழர் கட்சி கொடுத்தது பெண்களுக்கு … எல்லாரும் சம உரிமை பேசினார்கள் – பெண்களுக்கான சுதந்திரத்தை – விடுதலையை பேசினார்கள். நாம் தமிழர் கட்சி செஞ்சு முடிச்சிது. அப்படித்தான் இந்த மேடையில் நாங்கள் நிற்கிறோம் என தெரிவித்தார்.