
மத்திய பிரதேசத்தில் கவாலியோரில் சமீபத்தில் சந்தோஷ் பிரஜாபதி என்பவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு பிறகு 17 நாட்கள் மட்டுமே தன் கணவனுடன் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அவரது கணவர் 2 வாரங்கள் வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் அந்தப் பெண் தனது காதலனுடன் தப்பி ஓட திட்டம் போட்டுள்ளார். அதோடு சந்தோஷ், தன் மனைவிக்கு திருமணத்தின் போது பரிசாக கொடுத்த நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருடி, தப்பி ஓடியுள்ளார்.
அதன் பிறகு வீடு திரும்பிய சந்தோஷ், தன் மனைவி வீட்டில் இல்லாததை கண்டு சந்தேகம் அடைந்தார். உடனே அவர் தனது மனைவியிடம் பேஸ்புக்கில் பேசியுள்ளார். அப்போது அந்தப் பெண், தன் காதலனுடன் திருமணமான புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இதனால் சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை காவல்துறையினர் விசாரணையை தொடங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.