
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா (NASA), பூமியை சுற்றி வரும் விண்கற்கள் மற்றும் வான்பொருட்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக 34,725 வான்பொருட்களை தற்போது கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ‘2024 பி. டி.5’ என்ற ஒரு சிறிய விண்கல், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, வரவிருக்கும் மாதங்களில் பூமியின் அருகே சுற்றி வர இருக்கிறது. இதனால், இந்த விண்கல்லை “இரண்டாவது நிலவு” என்று வர்ணிக்கின்றனர்.
நாசாவின் கணிப்பின் படி, ‘2024 பி. டி.5’ விண்கல், செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை பூமியைச் சுற்றி, நிலவைப் போலவே ஒரு நிழல் நிலவாக மாறும். இது நமது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த தனித்துவமான நிலைமையானது, நாசா மற்றும் உலகின் பிற விண்வெளி அமைப்புகளால் ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வு, பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் விண்கற்களின் இயக்கம் ஆகியவை எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதற்கான தகவல்களை அறிவியலாளர்களுக்கு அளிக்கும். ‘2024 பி. டி.5’ போன்ற விண்கற்கள் நிலவின் பாதையில் சுற்றுவதைப் பார்ப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல, இதன் மூலம் புதிய விஞ்ஞானத் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.