
தமிழ் சினிமாவில் முதல் கனவே, கந்தர்வன், சிங்கம் புலி மற்றும் பட்டாம்பூச்சி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹனிரோஸ். இவர் தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஹனி ரோஸ் தான் குண்டாக இருப்பதால் சமூக வலைதளங்களில் தன்னை கேலி செய்வதாக கூறியுள்ளார். சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி தான் ஆடைகள் இருக்கும்.
சினிமாவில் எது மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும். எப்படி நடிக்க வேண்டும் என்பது நடிகைகளின் விருப்பம். கொஞ்சம் நடிகைகள் எடை கூடினால் உடனடியாக கேலி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் என்று வருத்தத்தோடு கூறியுள்ளார். மேலும் எதிர்மறையான கருத்துக்களை கூறி நோகடிக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என ஹனிரோஸ் கூறியுள்ளார்.
View this post on Instagram