
மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள காளியசாக் பிளாக் 2 ல் சில ஆண்கள் தெருவில் வைத்து ஒரு பெண்ணை கொடிய முறையில் கம்புகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கிராம மக்கள் பார்த்த போதும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இருப்பினும் அந்த பெண்ணின் மகள், தனது தாயை காப்பாற்ற முயன்ற போது, அவரும் தாக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கும், அவரது பக்கத்து வீட்டாருக்கும் இடையே நீண்ட காலமாக நிலம் தகராறு இருந்துள்ளது. பலமுறை பேச்சுவார்த்தை மூலம் சமரசம் பேசியும், தோல்வியடைந்து பலமுறை தகராறு ஏற்பட்டது.
அந்த பெண்ணின் கணவர் கடந்த திங்கட்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மறுநாள் அவரது கணவனை நேரில் சந்தித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவரது கணவனை பாதுகாக்க அந்த பெண் தலையிட்டபோது, அவரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அதோடு 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்து வருகிறது என்று கூறியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
না না ভাববেন না যে এই দৃশ্য আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশের।
এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের, গতকাল মালদা জেলার মোথাবাড়ি তে এই ঘৃণ্য দৃশ্য ঘটতে দেখা যায়।
পারিবারিক গণ্ডগোল, জমি নিয়ে বিবাদ, পাড়ার অশান্তি, সূত্রপাত যাই হোক না কেনো, আমাদের রাজ্যে একজন মহিলা কে প্রকাশ্য দিনের… pic.twitter.com/cXpaNO1P7l— Suvendu Adhikari (@SuvenduWB) September 18, 2024