இந்தியாவில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் விதமாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தவணை முறையில் 2000 ரூபாயாக மூன்று முறை வழங்கப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு 14-வது தவணைத்தொகை  ஜூன் மாதத்தில் வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது சில விவசாயிகளுக்கு மட்டும் 14-வது தவணை தொகையில் 4000 ரூபாய் வரும் என்று தகவல் கூறப்படுகிறது.

அதாவது 13-வது தவணை தொகைசில விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருக்கிறது. இவர்கள் வெரிஃபிகேஷன் செய்யாமல் இருப்பதால் பணம் வங்கியில் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக 13-வது தவணை தொகையை பெறாத விவசாயிகளுக்கு மட்டும் அந்த பணத்தோடு சேர்த்து 14-வது தவணைத் தொகையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பணம் வராத விவசாயிகள் பி.எம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று வெரிஃபிகேஷன் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்.