
ஆந்திரா சட்டசபை தேர்தலின் போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தேர்தலில் படுதோல்வியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சந்தித்தது. இந்நிலையில் வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடியாது என்று சபாநாயகர் அய்யனா பத்ருடு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்த போது 3 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாஜகவிற்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஜெகன்மோகன் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.