
ஓபிஎஸ் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுகிறார். சீமான் என்னைக்கு பொய் சொல்ல மாட்டாரு… உண்மையை மட்டும் தான் பேசுவாரு… ஒரு வேலை OPS அணியினர் போவதற்கு எந்த பக்கமும் இல்லை என்பதால், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றலாம் என நினைக்கின்றார்களா ? அதற்க்கு வாய்ப்புகள், சாத்தியம் இருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் கிடையாது. ஒருத்தர் ஒருத்தர் புரிந்து வைத்துக் கொள்வதில் வருவது தான். புரிந்து வைத்ததில் இவர் இப்படி… இவர் இப்படிப்பட்டவர் என்று….
அதிலே கூடுதலாக என்னை நன்கு அறிந்ததினால் சொல்லுகிறார்களே ஒழிய, அவர்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது, கொள்கை இருக்கிறது. நான் ஒன்னு கேட்கிறேன்… என் தலைவர் யார் என்று பலமுறை சொல்லிவிட்டேன்…. அதை வந்து நீங்கள் ஏற்பீர்களா ? என்னோடு கூட்டணிக்கு வருகின்ற நீங்கள் ஏற்பீர்களா ? என்னுடைய மேடையில் பக்கத்தில் பெருசாக தலைவர் படம் இருக்கும். நீங்க பயப்படாமல் உட்கார்ந்து இருப்பீர்களா ?
நீங்கள் ஒரு youtube இல் எங்கள் அண்ணன் படம் ஓரமாக வைத்தாலே…. ரிப்போர்ட் அடித்து மூடி விடுகிறீர்கள். ரொம்ப கஷ்டப்பட்டு, ஒரு ரூபாய்… இரண்டு ரூபாய்… நூறு… ஐம்பதாக சேர்த்து ஆயிரம் கணக்காக போஸ்டர் ஒட்டுவோம். போலீசுக்கு வேலையே காலையில் இருந்து அதை கிழித்து, கிழித்து எடுப்பது தான். நான் கேட்பேன் என்ன வேலை செய்து கிளித்தீர்கள் ? என்று கேட்டால்… உங்கள் போஸ்டர் பூராம் கிழித்தேன் என்று சொல்வதற்கு தான் இந்த வேலை.
அது கஷ்டம்… அவர்கள் ஒரு கோட்பாடு… அம்மையார் ஜெயலலிதா ஆட்சி நடத்தனும் என்று சொல்லுவார்கள். இவர்கள் வந்தால் இவர்கள் ஒரு ஆட்சி முறை என்று சொல்லுவார்கள்… நாங்கள் இது இல்லாத ஒரு ஆட்சி முறை என்று சொல்லுகிறோம். ஒருத்தர் ஒருத்தர் வைத்திருக்கின்ற புரிதல், நன் மதிப்பில் பேசுவது தான். அதை அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என தெரிவித்தார்.