முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயன்றார். ஆனால் சிறை தண்டனை அதனை தடுத்தது. பின்னர் கூவத்தூரில் நடைபெற்ற களேபரங்கள், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியது எல்லாம் நாம் அறிந்ததே. இதற்கெல்லாம் எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் தொடங்கிய நாள் இன்று.

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவகத்தில் சென்ற 2017 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் தர்மயுத்தம் செய்தார் என்பதும், அதன் பிறகு பல அரசியல் திருப்புங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அதிமுகவின் இரண்டு அணிகள் மீண்டும் ஒரே அணியாக செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.