ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய ஓபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்  மனோஜ் பாண்டியன்,  உண்மையிலே வருகின்ற 2024 ஆம்  ஆண்டில் புரட்சி செய்யக்கூடிய ஒரு அடித்தளம் தான் நமது புரட்சி தொண்டன் என்பதை தெரிவித்து,

அந்த புரட்சியை செய்கின்ற கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் அவர்கள்,  இந்த புரட்சி தொண்டன் மூலமாக தொண்டனின் உரிமைகளை பாதுகாத்து,  2026 ஆம் ஆண்டு தொண்டர்களின் ஆட்சியை…  தொண்டர்களின் விருப்பத்தின் பேரில்…  அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் கண்டிப்பாக முதலமைச்சராக வருவார்கள் என்பதை தெரிவித்து,  இந்த நாளிதழில் அனைவரும் ஒருங்கிணைத்து, ஒத்துழைத்து இதற்கு எல்லா ஆதரவுகளையும் தர வேண்டும் என்பதை கேட்டு விடை பெறுகின்றேன் என சுருக்கமாக பேசி முடித்தார்.