Zomato டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் என்று பெண் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அகமதாபாத்தில் தொடர் மழை பெய்தது. அப்போது zomato-வில் காபி ஆர்டர் செய்தேன். என்னுடைய ஆர்டர் தாமதமாக வந்தது. ஸ்வேதாங் ஜோஷி என்ற வாலிபர் தான் எனக்கு டெலிவரி செய்தார்.

தாமதமாக வந்ததால் அவர் தொடர்ந்து மன்னிப்பும் கேட்டார். பின்னர் தனது பாதத்தில் அடிபட்டுள்ளதாக தொடர்ந்து கூறினார். நான் என்னுடைய டார்ச் லைட் அடித்து பாதத்தில் பார்க்க முயன்று போது, அவரது பிறப்புறுப்பு வெளிப்பட்டது.

அப்போது அந்த நபர் சிரித்துக் கொண்டே தன்னிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்டார். இதுகுறித்து அந்தப் பெண் அந்த நிறுவனத்திற்கு தெரிவித்தார். ஆனால் அவர்களின் பதில் அவரை மேலும் துன்புறுத்தியதாக கூறினார். எனக்கு நடந்த இந்த விஷயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்கள் இருதரப்பிலும் என்ன நடந்தது என்பதை விசாரிப்பதாக கூறினார்கள்.

மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறினார், ஆனால் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இதையடுத்து மேலும் ஒரு பதிவில் அந்நிறுவனம் தன்னை தொடர்பு கொண்டதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இன்னுமும் நான் பாதுகாப்பு பெற்றதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.