தற்போது மின் மீட்டர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டிஎன்பிடிசி 6 தனியார் நிறுவனங்களிடம், 12 லட்சம் சிங்கிள் பேஸ் மீட்டர்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. புதிய மீட்டர்கள் எல்லாம் கட்டங்களாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 லட்சம் மீட்டர்களும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய மீட்டர்கள், புதிய வீடுகள், கட்டிடங்கள், பழுதடைந்து மீட்டர்களுக்கு பதிலாக பதிந்தும்  பொருத்தப்படாமல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து டிஎன்பிடிசி மூத்த அதிகாரி ஒருவர் tnie-யிடம் கூறியதாவது, 2.7 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு நுகர்வோர் மற்றும் 40 மில்லியன் வணிக நுகர்வோருக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கு புதிய மீட்டர்கள் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய வாடிக்கையாளரின் தடையில்லா சேவையை உறுதிப்படுத்த எங்களுக்கு நிலையான மீட்டர் விநியோகம் தேவைப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் சப்ளையர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதனால் டெலிவரி செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வடக்கில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து டிஎன்பிடிசி இந்த மீட்டர்களை வாங்குகிறார்கள் என்று அதிகாரி கூறினார்.