
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கைல அதிகாரத்தை வச்சிருக்கீங்க.. அந்த அதிகாரத்தை வைத்து என்ன சொன்னீங்க நீங்க ? நீட்டை ஒழிக்க நாங்க வந்து முதல் கையெழுத்து போட்டுருவோம். எங்களுக்கு அந்த சூட்சுமம் தெரியும்னு சொன்னீங்க.. நான் கேட்கிறேன் ? அந்த கையெழுத்தை போட்டு ஒழிங்க.. அந்த சூட்சும என்ன தெரியுமா ?
2024ல எலக்சன் வருது. மத்தியில காங்கிரஸ் வரும். வந்ததுன்னா… நாங்க தான் வந்து நீட்டை ஒழித்துவிடுவேன் என்று… இந்த டயலாக் எத்தனை வருஷமா சொல்றீங்க ? கிட்டத்தட்ட ஒவ்வொரு எலக்சன்லயும் இந்த டயலாக்கை விடுவீங்க. தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி இந்த டயலாக்கை விட்டுட்டு இருந்தா…. மக்களை பொருத்தவரை நம்ப தயாராக இல்லை.
முழுக்க முழுக்க காந்தி செல்வன் அன்னைக்கு இணை அமைச்சராக இருந்த காலத்தில்… குலாம் நபி ஆசாத் அமைச்சராக இருந்த காலத்துல…. அன்னைக்கு திமுக ஆதரவோடு காங்கிரஸ் அன்னைக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோ அன்னைக்கு இருந்தது. அன்னைக்கு நீட் கொண்டு வரும்போது விட மாட்டேன்னு சொல்லி ஆர்டரை வாபஸ் வாங்க வேண்டியது தானே… ஏன் வாபஸ் வாங்கல நீங்க ?
நீட்ட கொண்டு வந்துட்டு.. விதையும் போட்டுட்டு. இப்ப வந்து தேர்தல் காலத்தில் ஓட்டு வாங்கணும் என்பதற்காக… நீட்டை சொல்லிட்டு… இப்ப 2024-ஆம் ஆண்டு பார்லிமென்ட் எலக்சன் வருது. அந்த எலக்சனுக்காக இப்போ நீலி கண்ணீரும்.. கிளிசரிங் கண்ணீரும் வடிக்கிறத பார்த்து மக்கள் ஏமாற மாட்டாங்க. என்ன பண்ணுவாங்க… எள்ளி நகையாடுவாங்க ? என பேசினார்.