கோவையில் போலி ரேஷன் கார்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு சேர வேண்டிய ரேஷன் பொருட்கள் சேர்வதில்லை. இதுகுறித்து கலெக்டருக்கு புகார் வந்துள்ளது.

இந்நிலையில் உண்மையான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே பொருள் வழங்கப்படும் என்று மாவட்ட வழங்கல் துறை அறிவிப்பை வெளியிட்டது.

இது குறித்து கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவ ரேகா அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒரிஜினல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும்.
மேலும் ரேஷன் பொருட்கள் பி. ஓ.எஸ் இயந்திரங்கள் வழியாக வழங்கப்படும். அதாவது ஸ்கேன் செய்து கைரேகை பதிவு செய்த பின் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பை ரேஷன் கடை பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் போலி ரேஷன் கார்டு புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.