
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஜூனியர் என்டிஆர் பெயர் இடம் பெற வாய்ப்பு இருக்கின்றது.
சென்ற மார்ச் மாதம் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் பல விருதுகளையும் குவித்தது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு இத்திரைப்படம் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் நாட்டு நாட்டு பாடல் விருதை தட்டி சென்றது.
இந்த நிலையில் 95வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக சர்வதேச பத்திரிக்கை ஒன்று தெரிவித்திருக்கின்றது. அதில் ஆஸ்கர் விருதுக்கான 10 நடிகர்களின் பட்டியலை அந்த நாளிதழ் வெளியிட்டு இருக்கின்றது. இதில் ஜூனியர் என்டிஆர் பெயர் முதல் வரிசையில் இருக்கின்றது.