செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், தமிழீழம்… அந்த இனம்… அந்த நிலம்… அந்தப் போராட்டம்….. அந்த போராட்டத்தின் மாண்பை  உள்வாங்கி இருக்காங்களோ…..  தமிழினம் மட்டுமல்ல,  இன்னைக்கு எங்கையோ ஓரிடத்தில் நம்ம வீட்டு பிள்ளை இருக்குதுன்னா…இந்த நிலம் , இந்த இனம், இந்த மொழியை தாண்டிய  கூட்டம் தான் அடைக்கலம் கொடுத்து இருக்கு என்பதையும், அடை  காத்து இருக்குங்குறது என்பதை நீங்க தெரிஞ்சுக்கணும்.

என்னைக்கு சிங்கள எதிர்ப்பு ? ஆனால் சிங்களத்தினுடைய அடுத்த இளைய தலைமுறை இருக்குல்ல…. எந்த சாலையில் நின்னு ஒருத்தன் கத்துனானோ…  அவனை போன்ற பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள்…. சிங்கள இளம்  பெண்கள்…  நிச்சயம் நான் இப்ப சொல்றேன்…..” துவாரகா”வினுடைய வருகையை அவர்கள் கொண்டாடுகிற காலம் தூரத்தில் அல்ல.

தமிழ்நாட்டுல நேரடியா புலிகள் எல்லாம் வர முடியாது. தடை இருக்கு..  தமிழ்நாட்டுல அறிவிக்கிறது நான் இப்போ முதல்ல இல்ல…. நீண்ட நெடுங்காலமாக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து….  இதற்காக இயங்குன ஐயா நெடுமாறன் அறிவிக்கிறார். அதன் பிறகு இப்போ ஒரு இளைய தலைமுறை என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைச்சு இருக்காங்க.

அப்போ அவங்க ஏன் அறிவிக்கல ? அப்படின்னா….  நீங்க ஊடகத்தை எடுத்து பாருங்க…. புலிகள் சம்பந்தப்பட்ட….. போராளிகள் சம்பந்தப்பட்ட….  ஒரு சிலரும் உலகத்துல அறிவிச்சிருக்காங்க….  அது உங்க பார்வைக்கு வந்திருக்கா?  இல்லையா என்று எனக்கு தெரியாது. அது அங்கு சொல்றதை விடவும்,  அவங்க தாய் தமிழ்நாட்டிலிருந்து இந்த செய்தி வெளிப்படணும்னு நினைக்கிறாங்க… அதனுடைய நிலைப்பாடு தான் இப்போ  தெரிவித்தார்.