கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் தோல்வி அவர்களுக்கு தேவையானது தான் என்று அரசியல் விமர்சகரும் பாஜக கட்சியின் ஆதரவாளருமான மாரிதாஸ் கூறியுள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்ணாமலையை கர்நாடகா தேர்தல் கண்காணிப்பு பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்தது. அதை தமிழக பாஜகவினர் கொண்டாடியதோடு கண்டிப்பாக கர்நாடகாவில் பாஜக தான் வெற்றியை பெரும் என்றும் கூறி வந்தனர். அண்ணாமலை இந்த விவகாரத்தில் ஓவர் பில்டப் கொடுத்ததாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள். அந்த வகையில் கர்நாடகா தோல்வி குறித்து மாரிதாஸும் விமர்சித்துள்ளார்.

அதாவது ஜனநாயக அடிப்படையில் எந்த முடிவு வந்தாலும் அதை அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இப்படி செய்வதற்கு பதில் மோடி மற்றும் அமித்ஷா அதை பார்த்துக் கொள்வார்கள் என இங்குள்ளவர்கள் ஓவர் பில்டப் செய்து வருகிறார்கள். பெங்களூரில் இருக்கிறவர்கள் கூட இந்த அளவுக்கு பில்டப் கொடுக்கவில்லை. ஆனால் இங்கே இருக்கிறவர்கள் ஓவர் பில்டப்  செய்கிறார்கள். கண்மூடித்தனமாக பில்டப் செய்வது ஆபத்தானது. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது. மேலும் பாஜகவின் தோல்வி அவர்களுக்கு தேவையானது தான் என்று கூறியுள்ளார்.