
செய்தியாளர்களிடம் பேசிய , நீட்டை விட ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை. நீங்கள் நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து விட்டீர்களா ? என்று கேட்கிறேன். இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டு காலமாக இந்த நாட்டினுடைய தேசிய கட்சிகளுக்கு காவேரி விவகாரத்தில் தீர்வு காண தெரிந்ததா ? மொழி வழி தேசியத்தை உண்டாக்கினார் காந்தி. அதன் காரணமாக இந்தியா சிதைவுபடாமல் காப்பாற்றப்பட்டது.
அதுபோல நதிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமா ? இல்லையா ? இரண்டு மாநிலங்களுக்கு இடையே தகராறு நடக்கிறது. 2 மாநிலங்களும் நீதிமன்றத்திற்கு போகிறது. நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. அதை நடத்துவதற்கு ஆணையம் இருக்கிறது. அதற்கு கட்டுப்பட வேண்டுமா ? இல்லையா ? கர்நாடகா. கர்நாடகா கட்டுப்பட மறுக்கிறான்.
தண்ணீரை திறந்து விடுகிற அதிகாரம் அவனுக்கு இருக்கிற வரைக்கும் ஒரு காலத்திலும் அவன் திறந்து விட மாட்டான். அப்படி திறக்க கட்டாயப்படுத்தினால் ? மக்களை விட்டு பந்த் செய்வான், தண்ணீரை மறிப்பான்… இல்லாததையெல்லாம் செய்வான். நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தியா திறக்க முடியும் என்று கேட்பான். ஆகவே நான் கேட்கிறேன்…. தமிழ்நாடு தனுரிமைக் கழகம் தைரியமாக முடிவு சொல்கிறது.
ஆணையம் என்பது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை போல தன்னிச்சையான…. மத்திய அரசாங்கத்திற்கு கட்டுப்படாத ஆணையமாக அமைய வேண்டும். எலக்சன் கமிஷனை போல…. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை போல…. ஆணையம் அமைய வேண்டும். அதன் கையிலே அணையை திறக்கின்ற அதிகாரத்தை கொடுக்க வேண்டும்….
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புபடி உரிய காலத்தில் தண்ணீரின் இருப்பிற்கு ஏற்ப திறந்து விடப்பட வேண்டும். இதை கர்நாடகத்தின் கையிலே கொடுத்து வைத்திருக்கின்ற வரையும் கர்நாடகா ஒரு காலத்திலும் இதை செய்யப் போவதில்லை. சீமான் காங்கிரஸ் கூட்டணியை அத்துவிடு… காங்கிரஸ் கூட்டணியை நிர்பந்தப்படுத்து என தீர்வு சொல்கிறார்கள். அத்துவிடு என்றால் ? அத்துவிட்டு போயிடுவான் அவன்.
ஏனென்றால் சிதம்பரமும், அழகிரியும், திருநாவுக்கரசும் போன்ற இந்த 5 பேரு … எதுக்கும் ஆகாத ஆட்கள் எம்பியாக வந்தால் என்ன ? வராவிட்டால் என்ன ? கர்நாடகாவில் அணைத்து பேரையும் நாங்கள் கொன்று வந்து விடுவோம் என சொல்லி, இந்த கூட்டணியை அத்து விட்டுட்டு அவன் போய் விடுவான் என தெரிவித்தார்.