
பாகிஸ்தான் அணியானது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்திடமும், அடுத்ததாக இந்தியாவிடமும் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுநர்களும்விமர்சித்து வந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரமீஷ் ராஜா மட்டும் ஐசிசியை விமர்சித்துள்ளார். அதாவது சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இதுபோல அட்டவணை அமைக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி பலம் குறைந்த வங்கதேச அணியிடம் முதல் ஆட்டத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். வங்கதேசம் தற்போது நன்றாக விளையாடி வந்தாலும் நம் வீரர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும். ஆனால் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி நாம் தோல்வியை தழுவி விட்டோம். இதன் மூலமாக கடும் நெருக்கடி நம்முடைய வீரர்களுக்கு ஏற்பட்டது. பாகிஸ்தான் ஏன் வங்கதேச அணிக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டிய விளையாடவில்லை. குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி இருந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் தான் இரண்டு அணிகளுக்கும் சமமான அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும்” என்று கூறியுள்ளார்.