
அக்டோபர் மாதத்தில் நடைபெறும் SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த கூட்டத்தை பிரதமர் புறக்கணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் உறுப்பு நாடுகளாக இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த கூட்டமைப்பில் 2017 ஆம் ஆண்டு இணைந்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை SCO அமைப்பு பிராந்திய பாதுகாப்பு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடனான உறவு ஆகியவற்றைக்கு ஒரு முக்கியமான அமைப்பு ஆகும்.
மேலும் sco அமைப்பு மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு கூட்டமைப்பாக பார்க்கப்படுகிறது. இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கூட்டம் பாகிஸ்தானில் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் நடக்க இருக்கிறது. சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு உதவியுடன் நடந்து வரும் பயங்கரமான தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 15, 16 தேதிகளில் நடக்க இருக்கும் SCO கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தை பிரதமர் மோடி புறக்கணிப்பாரா அல்லது இந்தியா சார்பில் பங்கேற்க தனது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரை அனுப்பி வைப்பாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது. சமீப நாட்களாக காஷ்மீரில் நடந்த பயங்கரமான தாக்குதலால் இந்தியா இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.