ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஜ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பூல்ஸ் மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதி வழியே எல்லை கட்டுப்பாடு பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் இந்திய ராணுவத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், ஆனால் துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பிற்காக ராணுவ வீரர்கள் அதிக அளவில் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.