பாகிஸ்தான் தொழிலதிபர் வகாஸ் ஹசன் என்பவர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லும் இண்டிகோ என்ற விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானம் மும்பையில் ஆறு மணி நேரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இந்த பயணத்தில் இருந்த வகாஸ் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை கண்ட சிலர் இந்தியா வருகைக்கு விசா அவசியமா? என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் இந்தியாவுக்குள் நுழையாமல் விமான நிலையத்திற்குள் இருந்ததால் எந்த விதமான விசா தேவையுமில்லாமல் நான் பயணம் செய்தேன் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான வரலாற்றுப் பின்னணி காரணமாக விசா பெறுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இந்திய விமானத்தில் உள்ள டெர்மினலில் இருந்து வெளியே செல்லாமல் இடைநிறுத்தம் மேற்கொள்வதற்கு எந்த தடையுமில்லை என பதிலளித்தார்.

அதோடு தான் மும்பை விமான நிலையத்தில் இருந்த சில மணி நேரம் அங்கிருந்த விஐபி லவுஞ்சில் தங்கியதாகவும், சுவையான வடபாவை சாப்பிட்டதாகவும் அவர் கூறினார். அப்போது இந்தியாவுக்குள் நுழையாத அளவிற்கு விமான நிலையத்திற்குள் தான் இருந்தாலும் அந்த சிறிய அனுபவமே தனக்கு புதுமையாக இருந்தது என்று தெரிவித்தார். தான் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பதை கண்ட விமான நிலைய அதிகாரிகள் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இணையத்தில் வைரலான இந்த வீடியோவின் மூலம் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழியாக இடைநிறுத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் பரவி வருகிறது.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

WAQAS HASSAN பதிவைப் பகிர்ந்துள்ளார் (@waqashassn)