
அமெரிக்காவில் 42 வயதான ஹான் லீ என்ற பெண், ஆசிய பெண்களை வைத்து பெரிய அளவிலான பாலியல் தொழிலை இயக்கி வந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களை தனது வலையில் சிக்கவைத்து, இவர்களிடம் இருந்து மிகுந்த பணத்தை சம்பாதித்துள்ளார். ஆசிய பெண்களை பணத்தின் ஆசையை காட்டி அமெரிக்காவிற்கு அழைத்து வந்து, பல்வேறு இடங்களில் பணியமர்த்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
ஹான் லீ கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க பெடரல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆசியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு விமான பயணங்கள், தங்குமிடங்கள் மற்றும் வேறு அனைத்து வசதிகளையும் முன்னேற்பாடாக செய்து, அவர்களை இந்த வலையில் சிக்க வைத்தார். அவர்களிடம் பணம் வசூலிக்கும் அளவு $350 முதல் $600 வரை அதிகமாக இருந்தது, குறிப்பாக அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகள் இவர்களது முக்கிய கிளையன்ட்களாக இருந்தனர்.
விசாரணை மையத்தில் ஹான் லீ தனது குற்றங்களை ஒப்புக்கொண்டாலும், எந்த பெண்களையும் கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தவில்லை எனத் தெரிவித்தார். நீதிமன்றம் விசாரணை முடிவில், ஹான் லீக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.