
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓட பாறை பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார் இவர் கோர்ட் கிளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி குன்னூர் காவல்துறையினர் விசாரணை செய்ததில் குற்றம் உறுதியானது.
இதைத்தொடர்ந்து ரஞ்சித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.