பான் கார்டு என்பது பல்வேறு செயல்முறைகளுக்கு தேவையான ஆவணம் ஆகும். உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இது தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள சான்றாகவும் செயல்படுகிறது. இந்நிலையில் போலி பான் கார்டுகள் மூலம் பண மோசடிகள் நடந்து வருகிறது. இதனை தடுக்க பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

பலமுறை இதற்கு அவகாசம் கொடுத்தும் கூட இன்னும் பலர் இதை செய்யவில்லை. இந்நிலையில் வரும் டிசம்பர் 31 இதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு ரத்து செய்யப்படும். மீண்டும் புதுப்பிப்பதும் கடுமையான நடைமுறை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.