கோயம்புத்தூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது கோவையில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தை நிர்வாக இயக்குனர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அவர் கடைகளில் விற்கப்படும் பிரட் மற்றும் பன் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆனால் அதற்குள் வைக்கப்படும் கிரீமுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் கடைக்கு வரும் உரிமையாளர்கள் எங்களுடன் சண்டை போடுகிறார்கள். அவர்களை எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் தனித்தனி ஜிஎஸ்டி குறிப்பிட்டு பில் போட்டு கொடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறினார்.

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லாத நிலையில் அதற்குள் வைக்கப்படும் கிரீமுக்கு மட்டும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் கஸ்டமர் பன்னை மட்டும் தாருங்கள் அதற்குள் கிரீமை நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். எங்களால் கடை நடத்த முடியல மேடம். எனவே எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான வரியை நிர்ணயித்து விடுங்கள் ‌என்று கூறுகிறார். அவர் கூறியதை கேட்டவுடன் அனைவரும் சிரித்து விட்டனர். இருப்பினும் அவருடைய கோரிக்கை நியாயமானது தான். மேலும் இனிப்புக்கு 5 சதவீத வரியும் காரத்துக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். அவர் பேசியது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.