தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விமல். இவர் ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரித்தும் நாயகனாக நடித்தும் இருப்பார். இந்த படத்திற்காக இவர் கோபி என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கியுள்ளார். அந்தப் படம் சரியாக ஓடாததால் நஷ்ட ஈடு ஏற்பட்டது.

அதோடு கோபிக்கு இவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் கோபி நடிகர் விமல் மீது பண மோசடி வழக்கை தொடர்ந்தார். இந்நிலையில் நடிகர் விமல் கோபி, அவரது நண்பர்,லிங்கா பட விநியோகஸ்தரமான சிங்காரவேலன் மற்றும் சிங்கார வேலனின் மேலாளர் மீது வழக்கு தொடர்ந்தார்.

அதாவது தனக்கே தெரியாமல் தன் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததாக கூறி விமல் புகார் கொடுத்துள்ளார். புகாரின் படி கோபி கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

இதை அடுத்து கோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் விமல் கொடுத்த வழக்கு பொய்யானது என ஆதாரமாக நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருடைய வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.