சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை சேர்ந்த ராதா என்ற பெண் உறவினர்களுடன் பொதிகை ரயிலில் திருத்தங்கலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராதா திருத்தங்கல் ரயில் நிலையத்தில் தனது கைப்பையை ரயிலில் தவற விட்டு சென்றார். இது தொடர்பாக உடனடியாக ராதா தனது கணவருக்கு தெரிவித்தார்.
இதற்கிடையே பணியில் இருந்த ரயில்வே போலீசார் மாரியப்பன், அய்யாசாமி ஆகியோர் கைப்பையை கைப்பற்றினர். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி கைப்பையை ராதாவின் கணவர் செல்வராஜிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைப்பையில் இருந்த பணம், நகை செல்போன் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட செல்வராஜ் போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.