
கோடை காலம் தொடங்கி விட்டதால் விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தினால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இதன் காரணமாக தற்போது ரயில்வே நிலையத்தில் பெரிய விசிறிகள் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று தப்பித்துள்ளனர். மேலும் இந்த பெரிய மின் விசிறிகள் பொருத்தியதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இது தொடர்பான வீடியோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Southern Railway has upgraded wall-mounted fans with High Volume Low Speed (HVLS) fans at Dr. MGR Chennai Central Station as a game-changer for passenger comfort.
Now, every passenger can enjoy cool & refreshing air while waiting for their trains.#SouthernRailway @railminindia pic.twitter.com/LGDogRW1ML
— Southern Railway (@GMSRailway) May 11, 2023