
அரியலூர் மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்பணித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது 100 பேருக்கு வழங்கப்படுவதுடன், தலா 1 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பின்னர் வருகிற ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அரியலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.