
இன்றைய நவீன காலகட்டத்தில் நாளுக்கு நாள் அப்டேட்டுகள் அதிகரித்து வருகிறது. இதை தெரிந்து கொள்ளாவிட்டால் அதை பயன்படுத்துவது கடினமாக இருக்கும். குறிப்பாக பணம் செலுத்தும் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேடிஎம் வாலட்டை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பது தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் கையில் உள்ள ஸ்மார்ட் ஃபோனில் பேடிஎம் ஆப்பை ஓபன் செய்து கொள்ளவும். வலது பக்கம் மூலையில் ப்ரொபைல் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு ப்ரொபைல் பக்கத்தில் இருக்கும் கேமரா ஐகானை கிளிக் செய்து கொள்ளவும்.
அந்த பக்கத்தில் தொலைபேசி எண், பெயர் போன்ற விவரங்கள் கொடுக்க வேண்டும். அதே பக்கத்தில் கீழே ஸ்க்ரோல் செய்யும் போது பேடிஎம் வாலட் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை Activate now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அக்கவுண்டில் இணைக்கப்பட்ட போன் நம்பருக்கு ஒரு otp வரும். அதனை code என கேட்கும் போது உள்ளிட வேண்டும். ஓடிபி கொடுத்த பிறகு choose the reason for inactivete என்ற ஆப்ஷன் இருக்கும். அதை அழுத்தினால் நான்கு ஆப்சன்கள் இருக்கும் .அதில் எதாவது ஒரு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். எல்லாம் சரியாக கொடுத்த பிறகு ப்ளூ கலரில் கன்ஃபார்ம் டு ஆக்டிவேட் வாலெட் என்ற ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்தவுடன் சிறிது நேரம் கழித்து conguragulation wallet activate என்று காண்பிக்கப்படும்.