
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ போதையை ஒழித்து விட்டார்களா? தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா ரீவிவ் மீட்டிங் நடத்தி, போஸ் கொடுப்பதோடு சரி…
ரீவிவ் மீட்டிங் தாக்கம் என்ன ? உண்மையிலேயே கட்டுப்படுத்தப்படுகிறதா ? காவல்துறையை சுதந்திரமாகவிடவில்லையே… காவல்துறையை சுதந்திரமா விட்டால் தானே எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வரும்… சொல்லுறது தலைமை செயலகத்துல இருந்து சொல்லுறீங்க… பில்ட் லெவலில் காவல்துறை போனால்…
காவல்துறையை யார் கட்டுப்படுத்தப்படுகிறது ? வட்டச் செயலாளர் கட்டபடுத்துகிறார்…. ஒன்றிய செயலாளர் கட்டுபடுத்துகிறார்….. நகர செயலாளர் கட்டுப்படுத்துகிறார்…. பேரூர் செயலாளர் கட்டு படுத்துகின்றார்… மாவட்ட செயலாளர் கட்டுப்படுத்துறாரு…மாவட்ட செயலாளர் தான் மாவட்ட எஸ்பி. DMK கட்சினுடைய மாவட்ட செயலாளர் தான் மாவட்ட SP. DMK ஒன்றிய செயலாளர் AC,
DMK வட்டச் செயலாளர் இன்ஸ்பெக்டர்…. இப்படி பிரித்தால் எப்படி சட்டம் – ஒழுங்கு பராமரிக்கப்படும். பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்குமா ? வலிமை உள்ளவர்கள் வைத்ததெல்லாம் சட்டமாகாது தம்பி என்று சொன்னார் தலைவர்…. அதே மாதிரி வலிமை உள்ளவுக இவுங்க தான் தலைவரே பாடி இருக்காரு …இப்படி இருந்தால் எப்படி ? 40க்கு 40 வரும். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ballot is stronger than the bullet என சொல்லுவார்கள். வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது. மக்கள் சைலெண்டா இருக்காங்க… இரட்டை இலைக்கு எல்லாம் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டுவார்கள் என பேசினார்.