
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது…. இந்திய வானிலை மையம் அறிவித்தவுடன் புயலோ, வெள்ளமோ வரும் என்று அறிவித்தவுடன்… மக்களுக்கு தக்க ஆலோசனை வழங்கப்படும்.
மக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள்….. ஐந்து நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்… அதோடு டார்ச் லைட், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்கு பால், பிரட்… அதோடு தண்ணீர், வீட்டில் மேல்நிலைத் தொட்டி இருந்தால் தண்ணீர் நிரப்பி கொள்ள வைத்துக்கொள்ள வேண்டும்…
ஆவணங்கள் இருந்தால் பத்திரப்படுத்த வேண்டும்… மாணவர்களின் சான்றுகள், புத்தகம் எல்லாம் பத்திரப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஆலோசனை… ஊடகத்தின் வாயிலாக….. பத்திரிக்கையின் வாயிலாக அறிவிப்போம். ஆனால் இந்த விடியா திமுக அரசு,
இந்திய வானிலை மையம் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, மக்களுக்கு எச்சரிக்கையாக எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. இதனால் மக்கள் அவர்கள் முன்னெச்சரிக்கை உணவு பொருட்கள் எதுவும் வாங்கிக் வைத்துக் கொள்ளவில்லை. இதனால் மக்கள் சாப்பாடு கூட இல்லாமல் தள்ளாடிக்கொண்ட காட்சியை பார்க்கின்றோம் என தெரிவித்தார்.