தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற போது 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி புதுக்கோட்டையில் 4 பேரும், பெரம்பலூரில் 3 பேர், அரியலூரில் 4 பேர், தஞ்சாவூரில் 5 பேர், திருவாரூரில் 10 பேர், நாகையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மருத்துவம் படிக்காமல் போலியான சான்றிதழ்களை வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களின் நலன் கருதி போலி மருத்துவர்கள் களை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரியிலும் நேற்று 3 போலி மருத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் பல போலி மருத்துவர்கள் கைது செய்யப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.