
தற்போதைய காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி காரைக்காவலன் என்ற மொபைல் செயலியை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் ஹெல்மெட் அணியாமல் செல்லும் அரசு ஊழியர்கள் பற்றிய புகாரை தெரிவிக்கலாம். மேலும் அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்கவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.