தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரயிலில் பயணம் செய்வதற்கு 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில் இன்று முதல் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு தொடங்கிவிட்டது‌. அதன்படி ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்வதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

அதன்பிறகு ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்வதற்கு செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை தினத்தன்று பயணம் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு ஐஆர்சிடிசி இணையதளங்கள் அல்லது ரயில் நிலையங்களுக்கு சென்று முன்பதிவினை செய்து கொள்ளலாம். மேலும் தீபாவளி பண்டிகையையும் முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.