தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியன் கோவிலுக்கு பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரம் என்பது பாஜக தலைவர் முன்னரே அறிவித்துவிட்டார். சினிமா துறையில் ஜெயித்து விட்டால் அரசியலிலும் அதுபோல் நடக்காது. இதனை பலருக்கும் தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர்.

இவ்வாறு மறைமுகமாக த.வெ.க கட்சித் தலைவர் விஜயை விமர்சித்துள்ளார். பா.ஜ.க கட்சி கடந்த 2014,2019 தேர்தலில் பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெற்ற போதும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கொடுத்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் முன்னுரிமை வழங்க பிரதமர் தலைமையில் ஆலோசித்து வரப்படுகிறது. இவ்வாறு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எச். ராஜா தெரிவித்திருந்தார்.