
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், இங்கு அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் எந்த பதவியும் பார்க்கவில்லை, எந்த சுகத்தையும் பார்க்கவில்லை. அம்மா இருந்தபோதும் இல்லை…. அண்ணன் அமைச்சராக இருந்த பொழுது… எடப்பாடி முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட ஒரு பைசாவை கூட தொட்டுப் பார்க்காதவர்கள் அமர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். மாபெரும் ஆர்ப்பாட்டம்.
அந்த ஆர்ப்பாட்டத்தை தொண்டர்கள் வரவேற்று இருக்கிறார்கள். ஆனால் அந்த புறம் பணம் படைத்தவர்கள். பணத்தை வைத்து இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிகாரனையும் விலைகொடுத்து வாங்கி கொண்டு இருக்கிறார்கள் . விலை போடுகிறார்கள்… அவருடைய தேவைக்கு விலை போடுகிறார்கள். அதை தொண்டர்கள் உணர்ந்து இருக்கின்றார்கள்… மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள்… எடப்பாடி எப்படி பட்டவர் ?
எத்தனை கொலை செய்தவர் ? கொட நாடுவில் நடந்த கொலைக்கும், கொள்ளைக்கும் காரணம் யாரு ? என்பதை எல்லாம் கழக தொண்டர்களும் – பொதுமக்களும் உணர்ந்து இருக்கின்றார்கள். உணர்ந்து இருக்கின்ற தொண்டர்களையும் – பொதுமக்களையும் அண்ணன் பின் அணிவகுக்க வைக்கின்ற பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
அந்த பணியை மேற்கொள்வதற்கு இங்கே அமர்ந்து இருக்கின்ற தலைவர்கள், அண்ணன் அவர்கள்… அந்த பணியை மேற்கொள்வதற்கான ஆக்கத்தையும் , ஊக்கத்தையும் தொண்டர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.