
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து மக்கள் நடிகர்களுக்கு ஓட்டு போடும் காலமெல்லாம் மாறிவிட்டதாக நாராயணசாமி கூறினார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரை தவிர வேறு யாரும் கட்சி ஆரம்பித்து நிலைக்கவில்லை என்றும், பலர் கட்சி ஆரம்பித்து இருக்கும் இடம் தெரியாமல் சென்று விட்டதாகவும் விமர்சித்தார். விஜய் கட்சி ஆரம்பிப்பதால் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.