
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள முகையூர் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் கே.வி.எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய கோரிக்கையான “கள்” இறக்க அனுமதி, அதை பதப்படுத்த குளிரூட்டும் மையம், அரசு சார்பில் ம.பொ.சிக்கு சென்னையில் மணிபண்டவம் அமைக்க வேண்டும். அதோடு ம.பொ.சிக்கு பேரில் அரசு விருது வழங்க வேண்டும். இதைத்தொடர்ந்து கல் கடை திறக்க வேண்டும், பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்யக் கூடாது. பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து தொழிலாளிகள் விழுந்து இறந்தால் அரசு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
பதநீர் மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிக்கும் தொழிலில் கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து கோரிக்கை வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பணமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணா பேசினார். அதில் அவர் கூறியதாவது, காமராஜரும், ம.பொ.சியும் நாணயத்தின் இரு பக்கங்கள். விரைவில் ம.பொ.சிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களுக்கு கள்ளிறக்கும் உரிமம் கொடுத்தது போல, தமிழக அரசும் கள் இறக்க தொழிலாளர்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்றார். மேலும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு நலச்சங்கத் தலைவர் வி.என்.கண்ணன், முகையூர் கண்ணன், உதயகுமார், சிவகண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.